
கோப்புப்படம்
உலகளவில் இதுவரை 7.3 கோடி பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் ஒட்டுமொத்தமாக 7,31,90,427 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் இதுவரை 16,27,900 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனாவிலிருந்து 5,13,24,489 பேர் குணமடைந்துள்ளனர். சுமாா் 2,02,38,038 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,517 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து இரண்டாமிடத்தில் இந்தியாவும், மூன்றாமிடத்தில் பிரேசிலும், நான்காமிடத்தில் ரஷியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.