
கோப்புப்படம்
அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.63 கோடியைக் கடந்துள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300,267 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.91 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருநாளில் 1,534 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நேற்று முதல் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் பிரேசிலைத் தவிர மற்ற நாடுகளில் 30 லட்சத்துக்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 90 லட்சத்தைக் கடந்தும், பிரேசிலில் 60 லட்சத்தைக் கடந்தும் பாதிப்பு பதிவாகியுள்ளது.
உலக அளவில் 7 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.