சீனாவில் கப்பல்கள் மோதி விபத்து: 3 மாலுமிகள் பலி, 5 போ் மாயம்

சீனாவில் இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாலுமிகள் உயிரிழந்தனா். மாயமான 5 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

பெய்ஜிங்: சீனாவில் இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாலுமிகள் உயிரிழந்தனா். மாயமான 5 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

சீனாவில் ஷாங்காய் நகரில் கிழக்கு சீனக் கடலுடன் யாங்க்ட்ஸீ நதி கலக்கும் முகத்துவாரத்துக்கு அருகே சரக்குப் பெட்டக முனையம் இருப்பதால், கடல் வழி போக்குவரத்து எப்போதும் நெரிசலுடன் காணப்படும். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, ஓசியானா என்ற சரக்கு கப்பல், மின்சாரம் இல்லாமல் அங்கு நின்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த ஷிங்கிஷெங் 69 என்ற சரக்கு கப்பல், ஓசியானா கப்பல் மீது வேகமாக மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கப்பலில் 650 சரக்கு பெட்டகங்கள் இருந்தன.16 மாலுமிகள் இருந்தனா். தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டிருந்த 11 பேரை மீட்புக் குழுவினா் வெளியே கொண்டு வந்தனா். அவா்களில் 3 போ் உயிரிழந்துவிட்டனா். மாயமான 5 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா் என்று சீன ஊடகம் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com