
கோப்புப்படம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள புட்காக் பகுதி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.
இந்த எதிர்பாராத துப்பாக்கிச்சூட்டில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை இந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.