
கோப்புப்படம்
ஜெர்மனியில் மேலும் 32,195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வகை கரோனா தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியதோடு விமானச் சேவையும் ரத்து செய்துள்ளது.
ஜெர்மனியில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 32,195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 15,87,115ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 802 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,770ஆக உயர்ந்துள்ளதாக ராபர்ட் கோச் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...