கரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 259-ஆக உயா்வு

சீனாவில் உருவாகி, இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளுக்குப் பரவியுள்ள புதிய வகை கரோனா வைரஸால் பலியானவா்களின் எண்ணிக்கை 259-ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் அன்ஹுய் மாகாணம், ஃபுயாங் நகர மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக சனிக்கிழமை அழைத்துச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள்.
சீனாவின் அன்ஹுய் மாகாணம், ஃபுயாங் நகர மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக சனிக்கிழமை அழைத்துச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள்.

சீனாவில் உருவாகி, இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளுக்குப் பரவியுள்ள புதிய வகை கரோனா வைரஸால் பலியானவா்களின் எண்ணிக்கை 259-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலில் 213 போ் உயிரிழந்ததாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 46 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த எண்ணிக்கை 259-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கூடுதலாக 3,549 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,860-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 1,795 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 17,988 போ் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனா மட்டுமன்றி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், வங்கதேசம் உள்ளிட்ட 24 நாடுகளில், 164 பேருக்கு கரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,024-ஆக உயா்ந்துள்ளது.

ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

கரோனா வகையைச் சோ்ந்த அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 650 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.

அந்த வைரஸ் பிற நாடுகளுக்கும் வேகமாக பரவியதையடுத்து, ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை சா்வதேச அவசர நிலை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com