
ஓரளவு உதவி பெற்றால்கூட, நன்றிக்கடனாக அதிகம் திரும்ப வழங்குவேன் என்பது சீன மக்கள் கடைப்பிடித்து வரும் பாரம்பரிய வழக்கமாகும்.
அதன்படி, சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீச்சியேன் சீனாவுக்கு உதவி அளித்து வரும் சர்வதேச சமூகத்துக்கு நன்றி தெரிவித்தார். உலக சுகாதார பாதுகாப்பைப் பேணிக்காக்கும் சீனாவின் மனவுறுதியையும் கடமையையும் அவர் வெளிப்படுத்தினார்.
கொவைட்-19 நோய் பரவலைத் தடுப்பதில் ஈடுபடும் சீனாவுக்கு, 170க்கும் அதிகமான நாடுகள் மற்றும் 40க்கும் அதிகமான சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தவிரவும், பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் பொருளுதவி மற்றும் நிதியுதவி மூலம் சீனாவுக்கு ஊக்கம் அளித்தன.
தற்போது, சீனாவில் நோய் பரவல் கட்டுப்பாட்டில் தெளிவான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அதேசமயம் ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் நிலைமை மோசமாகி வருகின்றது. மருத்துவச் சிகிச்சை மற்றும் சுகாதார வசதி பற்றாக்குறை நிலவும் சில நாடுகள் கவலை அளிப்பதாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர்புடைய நாடுகளுடன் தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள சீனா தயாராக உள்ளது.
ஈரானுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் முகமூடிகளை நன்கொடையாக சீனா வழங்கியது. ஜப்பானுக்குப் புதிய ரக கரோனா வைரஸின் நியூக்ளிக் அமிலம் கண்டறிதல் மறுதுணைப் பொருட்களைச் சீனா இலவசமாக வழங்கியது. ஆப்பிரிக்காவுக்குத் தொழில் நுட்ப உதவி வழங்கி வருகின்றது.
இன்னலை எதிர்கொள்ளும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதன் மூலம்தான் உலகம் இயல்பான பாதைக்குத் திரும்ப முடியும்.