
நன்றி: சிஎன்என்
உலகின் மிக வயதான மனிதரான ஜப்பானின் சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் காலமானார்.
ஜப்பானைச் சேர்ந்த சிடேட்சு வடானபி 1907-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தார். உலகின் மிக வயதான மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு 12 பேரன்களும் 16 கொள்ளுப் பேரன்களும் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் காலமானார். இவருக்கு வயது 112.
உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஜப்பானின் நொனாகா, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 113. உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் காலமானதையடுத்தே, சிடேட்சு வடானபி உலகின் மிக வயதான மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மிக வயதானவர்கள் அதிகம் நிறைந்த ஜப்பானில், கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி நூறு வயதைக் கடந்த 69,785 பேர் வசிப்பதாகவும், அவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.