2020 என்ற எண் மிகவும் அதிர்ஷ்டமான எண்: சீன ஊடகக் குழுமத் தலைவர்

2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹெய் சியுங்,
2020 என்ற எண் மிகவும் அதிர்ஷ்டமான எண்: சீன ஊடகக் குழுமத் தலைவர்

2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹெய் சியுங், வானொலி மற்றும் இணையத்தின் மூலம், பல்வேறு நாடுகளிலுள்ள சீன ஊடகக் குழுமத்தின் நேயர்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் தன் வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது,

2020 என்ற எண், மிக அதிர்ஷ்டமான எண் ஆகும். சீன மொழியில், 2020 என்ற உச்சரிப்பு, உங்களை நேசிக்கிறேன் என்பதோடு தொடர்பு கொண்ட ஒன்றாகும். பிறக்கப்போடும் புதிய ஆண்டின் 2020ஆம் ஆண்டில், நான், சீன ஊடகக் குழுமத்தின் சார்பாக, பெய்ஜிங்கிலிருந்து உங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு கணமும், நமது வரலாற்றை உருவாக்கும் வல்லமை பிடைத்தவை. 2019ஆம் ஆண்டின் நிறைய கணங்கள், நினைவுகளாக மாறியுள்ளன. 2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை நாங்கள் கொண்டாடினோம். நண்பர்கள், சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஆவணப்படம் மற்றும் நேரலை திரைப்படத்தின் மூலம், எங்களுடன் இணைந்து, கடந்த 70 ஆண்டுகால சீனாவின் வளர்ச்சி பாதையை மீளாய்வு செய்துள்ளனர்.

2019ஆம் ஆண்டில், நண்பர்கள், நவீன காலத்தில் உண்மையான நேர்மையான சீனாவை அறிந்துகொள்வதற்காக, நாங்கள் சீன வளர்ச்சியின் அனைத்து கணங்களையும் முயற்சியுடன் பதிவு செய்து வருகிறோம். 5 ஜி, 4 கே மற்றும் 8 கே AI தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வரும் நாங்கள், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றத்தின் உச்சி மாநாடு, ஆசிய நாகரிக உரையாடல் மாநாடு, மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்த 20 ஆண்டு நிறைவு கொண்டாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினோம். நாங்கள் வெளியிட்ட, ஷி ச்சின் பிங்குக்குப் பிடிக்கும் சீனப் பழமொழி என்ற சிறப்புப் படம், உலகப் பல்வேறு நாடுகளின் நண்பர்கள் சீன வரலாற்றையும் பண்பாட்டையும் சிந்தனையும் அறிந்துகொள்ளும் முக்கிய வழிமுறையாக மாறியுள்ளது. 

2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சீன ஊடகக் குழுமம், இணையக் காலத்தின் தனிச்சிறப்பை நன்றாக உணர்ந்து கொண்டுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங்கின் கட்டளையை நன்றாக நினைவில் நிறுத்தியுள்ள நாங்கள், புதுப்பிப்பில் ஊன்றி நின்று, உலகின் உச்ச நிலை செய்தி ஊடகமாக மாறுவதற்கு பாடுபட்டு வருகின்றோம்.

உலகில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நேர்மையாகவும் உண்மையாகவும் சரியாகவும் ஒளிப்பரப்புவது, எங்களின் அடிப்படைக் கோட்பாடு ஆகும். தற்போது உலகின் மிகப் பெரிய செய்தி ஊடகமான சீன ஊடகக் குழுமம், வெளிப்படையான ஒத்துழைப்புக்குரிய கருத்துகளின் அடிப்படையில், உலகின் பல்வேறு செய்தி ஊடகங்களுடன் ஒத்துழைத்து வருகின்றது. 2019ஆம் ஆண்டில், நாங்கள், அமெரிக்கக் கூட்டுச் செய்தி நிறுவனம், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், எ எஃ பி, பி பி சி ஆகிய 150க்கும் மேலான சர்வதேச செய்தி ஊடகங்களுடன் கலந்தாய்வு செய்துள்ளோம்.

ஆனால், சில மேலை நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடகங்கள், காரணமின்றி, சீனாவுடன் தொடர்புடைய முக்கிய செய்திகளில் தவறான தகவல்களை வழங்கி வருகின்றன. உண்மை, செய்திகளின் ஆயுளாகும். கற்பனையின் அடிப்படையில், செய்திகளை வெளியிட்டால், செய்தி ஊடகங்களின் நம்பிக்கைக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும்.

உண்மைகளைத் தேடுவது, தப்பு எண்ணத்தை நீக்குவது ஆகியவை, வேகமாக மாறி வருகின்ற சிக்கலான சர்வதேச நிலைமைக்கு மிக முக்கியமானது. நேர்மையான உண்மையான நிலைப்பாட்டில் ஊன்றி நிற்கும் சீன ஊடகக் குழுமம், உலகிற்கு உண்மைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கும்.

ஓரளவு வசதியான சமூகத்தை பன்முகங்களிலும் கட்டியமைக்கும் கடைசி ஆண்டு 2020ஆம் ஆண்டாகும். 140 கோடி மக்கள் கொண்ட நாட்டில் வறுமையை முழுமையாக ஒழிப்பது என்பது, மனித வரலாறு முன் கண்டிராத பெரும் சாதனையாகும். சீன ஊடகக் குழுமம் உயர்வான வரையறையின் படி, சீனாவின் நிகழ்வுகளை உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள நண்பர்களுக்கு ஒளிப்பரப்பும். தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com