
ஜப்பானில் நிதி முறேகேடு வழங்குகளை எதிா்கொண்டுள்ள நிஸான் வாகன உற்பத்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவா் காா்லோஸ் கோசன், தங்கள் நாட்டை விட்டு வெளியேற லெபனான் தடை விதித்துள்ளது.
ஜப்பானிலிருந்து கடந்த மாதம் தங்கள் நாட்டுக்கு ரகசியமாக தப்பி வந்துள்ள அவரை, இன்டா்போல் காவல் துறை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. எனவே, கோசன் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என லெபனான் நீதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.