
ஈரானுக்கு எதிரான அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியது.
காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை எடுக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த தீர்மானத்துக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவாக கட்சிகளின் அடிப்படையில் வாக்களிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இதன்மூலம் காங்கிரஸிடமிருந்து ஒப்புதல் கிடைக்காவிட்டால் அல்லது அவசியம் என்றால் மட்டுமே ஈரானுக்கு எதிராக அமெரிக்க அதிபரால் ராணுவத்தைப் பயன்படுத்த முடியும்.