
பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 15 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேஸிலில் 1,071 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,502,424-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 55 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, நாட்டில் பலி எண்ணிக்கை 62,045 ஆகியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.