கரோனா வைரஸை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை

அமெரிக்காவின் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் ஜுலை 8ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி,
கரோனா வைரஸை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை
Updated on
1 min read

அமெரிக்காவின் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் ஜூலை 8ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, தற்போதுவரை அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இவர்களில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் தற்போது உலகளவில் 141 தடுப்பூசிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இத்துறையில் முன்னணியில் உள்ள நாடுகள், சில திங்களுக்குப் பிறகு தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணியில் வெற்றி பெறலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோசின் கட்டுரையை வெளியிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் எனும் செய்தித்தாள் கருத்து தெரிவித்துள்ளது.

தற்போது தடுப்பூசி பற்றிய ஆய்வு பணி ஆக்கப்பூர்வமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மேலதிகத் தடுப்பூசிகள், சோதனை கட்டத்தில் நுழையும். ஆனால், கடைசியில் இத்தடுப்பூசிகள் அனைத்தும் வெற்றி பெற முடியுமா? என்பதையும், எப்போது வெற்றி பெறும் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்று உலகச் சுகாதார அமைப்பைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

கரோனா வைரசுக்கான தடுப்பூச்சி கண்டறியப்படுவதற்கரிய காலக்கட்டம் வரை கரோனா வைரசின் பாதிப்பு தொடர்ச்சியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், இத்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச ஒத்துழைப்புத் தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com