
யாங்சி ஆறு உள்ளிட்ட ஆற்றுப்பள்ளத்தாக்கில் பல ஏரிகளின் நீர்மட்டம் முன்னெச்சரிக்கை கோட்டைத் தாண்டியுள்ளது.
சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கூறுகையில்,
தற்போது வெள்ளத் தடுப்பு நிலைமை கடுமையாக உள்ளது. பல்வேறு இடங்களின் அரசு, வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளைச் செய்வதோடு, பேரழிவுக்குப் பிந்தைய புனரமைப்புத் திட்டத்தையும் வகுக்க வேண்டும்.
இயல்பான உற்பத்தி மற்றும் வாழ்க்கையை மீட்டெடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G