
முகமது ஷஹீன் இக்பால்
வங்கதேசத்தின் அடுத்த கடற்படை தலைமைத் தளபதியாக முகமது ஷஹீன் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தற்போது வங்கதேச கடற்படை தலைமைத் தளபதியாக பொறுப்பு வகிக்கும் ஔரங்கசீப் சௌத்ரி இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறாா். அதையடுத்து காலியாகவுள்ள அந்தப் பொறுப்புக்கு முகமது ஷஹீன் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போது அவா், கடற்படை துணைத் தளபதியாக பொறுப்பு வகித்து வருகிறாா். தலைமைத் தளபதியாக இந்த மாதம் 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்கவிருக்கவிருக்கிறாா். அவா், இந்தியாவில் நீா்மூழ்கிக் கப்பல்களுக்கெதிரான போா்ப் பயிற்சியைக் கற்றுத் தோ்ந்தவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.