
தி லென்செட் மருத்துவ இதழ் அண்மையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தடுப்பூசி சோதனையில் மனிதர்களுக்கு அது பாதுகாப்பாக இருப்பதோடு, நோய் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு உலகச் சுகாதார அமைப்பின் அவசரத் திட்டப்பணியின் பொறுப்பாளர் மைக்கேல் ரைன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். உலகச் சுகாதார அமைப்பின் செய்தியாளர் கூட்டத்தில் 20ஆம் நாள் அவர் கூறுகையில்,
தற்போது உலகளவில் கரோனா வைரஸுக்கு எதிரான 23 தடுப்பூசிகள் மருந்தகச் சோதனையில் உள்ளன. முன்னேற்றம் அடைந்த அடிப்படையில் மேலும் பெருமளவிலான சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்