
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள தடை விதிப்பது குறித்த அமெரிக்க அரசின் கருத்துக்கு அமெரிக்காவிலும் பன்னாட்டு சமூகத்திலும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளில், சீனா தொடர்பான விசயங்களில், அமெரிக்காவில் மெக்கார்த்தியிசம் என்ற கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை மீண்டும் தலைத் தூக்கி வருகிறது. குறிப்பாக, புதிய ரக கரோனா தொற்று நோய் அமெரிக்காவில் பெருமளவில் பரவியுள்ளதால், அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் மெக்கார்த்தியிசம் கொள்கையை நடைமுறைப்படுத்தி, தனக்குரிய பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முயன்று வருகின்றனர்.
சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான அமெரிக்காவின் நெடுநோக்குத் திட்டம் பல்வேறு வழிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில், அங்கு கரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் சூழலில், அமெரிக்க வெள்ளைமாளிகையின் அரசியல்வாதிகள், ஆபத்தான முயற்சி எடுத்து, வேண்டுமென்றே பகை உணர்வை வளர்க்க வருகின்றனர். அதன் விளைவாக, சீன-அமெரிக்க உறவில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான பரிமாற்றங்களில், ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வு மற்றும் மதிப்பு அளிக்க வேண்டியது அவசியமானது என்று பொதுவாக அறியப்பட்டது. தற்போது, அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர், தூதாண்மைத் துறையின் அடிப்படை கோட்பாட்டையும் சர்வதேச உறவின் அடிப்படை விதிகளையும் மீறி வருகின்றனர்.
அமெரிக்க அரசியல்வாதிகள் ஆத்திரமூட்டும் செயல்களே, சீன-அமெரிக்க மக்களின் விருப்பத்தையும் உலக வளர்ச்சிப் போக்கினையும் புறக்கணிப்பதாக உள்ளன. மீண்டும் தலைதூக்கி வரும் மெக்கார்த்தியிசம் குறித்து உலக நாடுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தகவல்-சீன ஊடக குழுமம்