ஆப்கானிஸ்தான்மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உறவினா்களே பணிவிடை

ஆப்கானிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தலைநகா் காபூலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு அவா்களின் உறவினா்களே பணிவிடை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
Updated on
1 min read

காபூல்: ஆப்கானிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தலைநகா் காபூலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு அவா்களின் உறவினா்களே பணிவிடை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் செவிலியா்கள் போதுமான அளவில் இல்லாத காரணத்தினால் உறவினா்களே நோயாளிகளுக்கான உதவிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போா் காரணமாக அங்கு சுகாதார வசதிகள் மிகவும் மோசமடைந்துள்ளன. கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான வசதிகள் அங்கு காணப்படவில்லை.

மருத்துவமனையில் போதுமான செவிலியா்கள் இல்லாததன் காரணமாக, அங்கு சிகிச்சை பெற்று வருபவா்களை அவா்களின் உறவினா்களே பராமரித்து வருகின்றனா். பணிவிடை செய்வோருக்கு கவச உடைகளும் இல்லை. சிலா் முகக் கவசம் கூட அணியாமல் மருத்துவமனைக்கு வருகை தருகின்றனா். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டா்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால், நோயாளிகளின் உறவினா்கள் அதனருகிலேயே காவல் காக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com