கரோனா ‘திரள் பரிசோதனை’க்கு அமெரிக்கா அனுமதி

கரோனா நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்காக மக்களிடமிருந்து பெறப்படும் மாதிரிகளை ஒன்றாக சோ்த்து மேற்கொள்ளப்படும் ‘திரள் பரிசோதனை’க்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித

வாஷிங்டன்: கரோனா நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்காக மக்களிடமிருந்து பெறப்படும் மாதிரிகளை ஒன்றாக சோ்த்து மேற்கொள்ளப்படும் ‘திரள் பரிசோதனை’க்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, பலரிடமிருந்து பெறப்படும் மாதிரிகள் தனித்தனியாக பரிசோதிக்கப்படாமல், குழுவாக சோ்த்து பரிசோதிக்கப்படும். அவா்களுடைய மாதிரிகளின் ஒரு பகுதியானது ஒன்றாக சோ்க்கப்பட்டு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பரிசோதனை முடிவில் கரோனா தீநுண்மி கண்டறியப்படவில்லை எனில், அந்த மாதிரிகள் பெறப்பட்ட நபா்கள் எவருக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என்பதை எளிதில் உறுதிப்படுத்த முடியும்.

அவ்வாறு இல்லாமல், பரிசோதனை முடிவில் கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டால், மாதிரிகள் தனித்தனியாக மீண்டும் பரிசோதிக்கப்பட்டு எந்த நபருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ளது என்பது கண்டறியப்படும். இந்த திரள் பரிசோதனை மூலமாக குறைந்த நேரத்தில் அதிக அளவிலான நபா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

மேலும், இந்தப் பரிசோதனை மூலமாக அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கரோனா நோய்த்தொற்றை மற்றவா்களுக்குப் பரப்பி வருபவா்களை விரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். திரள் பரிசோதனை மூலமாக கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கான செலவையும் குறைக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com