
புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பல நாடுகள் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளன.
ஆனால், இத்துறையில் அமெரிக்க அரசு மக்களுக்கு ஏமாற்றம் தரும் விதம் தோல்வி அடைந்துள்ளது என்று வாஷிங்டன் போஸ்ட் 20ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் பிரித்தாளும் சூழ்ச்சி, பொது சுகாதாரத் துறையில் முதலீட்டுப் பற்றாக்குறை, சமூக மற்றும் பொருளாதாரத்தில் நியாயமற்ற நிலைமை, இனவெறி பாகுபாடு ஆகியவற்றை அமெரிக்க அரசு வெளிப்படுத்தியுள்ளது.
இதனால், அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டிரம்ப் அரசின் வழிக்காட்டலில், இத்தொற்று நோயின் நிலைமையை அறிவியலாளர் மற்றும் செய்தி ஊடகங்கள் மிகைப்படுத்தியுள்ளனர் என்று பல அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவில் அறிவியலாளர்களுக்கு எதிரான கருத்து, சதிக் கோட்பாடு மற்றும் அரசியல் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று இந்த விமர்சனக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்