சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார் - அதிபர் டிரம்ப்

கரோனாவுக்கான தடுப்பூசியை விரைவாக தயார் செய்ய சீனாவுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட்  டிரம்ப் தெரிவித்துள்ளார்.
US ready to work with China
US ready to work with China

கரோனாவுக்கான தடுப்பூசியை விரைவாக தயார் செய்ய சீனாவுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட்  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ஒருவர் தடுப்பூசி தயார் செய்ய சீனாவுடன் இணைந்து செயல்பட தயாரா என்று கேள்வி எழுப்பியபோது, "வெற்றிகரமாக கரோனா தடுப்பூசியை தயார் செய்ய  சீனா உள்பட யாருடனும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

மேலும், கரோனா நோய்க்கான தடுப்பூசி தயார் செய்வதில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தடுப்பூசி கண்டுபிடித்தால் அதனை உடனடியாக விநியோகம் செய்ய அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com