தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நன்மையளிக்கும் பங்குச் சந்தையின் புத்தாக்கம்

சீன மூலதனச் சந்தைச் சீர்திருத்தத்தில் முன்மாதிரி என்ற பெருமையுடன், ஷாங்காய் பங்குச் சந்தையின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்துக்கானப் பிரிவு ஜூலை 22ஆம் தேத புதன்கிழமையுடன்  ஓராண்டை நிறைவு செய்துள
தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நன்மையளிக்கும் பங்குச் சந்தையின் புத்தாக்கம்

சீன மூலதனச் சந்தைச் சீர்திருத்தத்தில் முன்மாதிரி என்ற பெருமையுடன், ஷாங்காய் பங்குச் சந்தையின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்துக்கானப் பிரிவு ஜூலை 22ஆம் தேத புதன்கிழமையுடன்  ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

21ஆம் நாள் வரை, 133 தொழில் நிறுவனங்கள் இப்பங்குச் சந்தைப் பிரிவில் தனது பங்குகளை வெளியிட்டுள்ளன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு, 2லட்சத்து 62ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. புதிய தலைமுறை தகவல் தொழில் நுட்பம், உயர் நிலை சாதன தயாரிப்பு,  உயிரின மருந்து தயாரிப்பு போன்ற முக்கிய தொழில்களில் இந்த தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, இலாபம் இல்லாத நிறுவனமும் இதில் வெற்றிகரமாக பங்குகளை வெளியிட்டியிருப்பது இதுவே முதல்முறை. 

அமைப்புமுறை ரீதியிலான புதுமையாக்கம் செய்வதன் மூலம், ஷாங்காய் பங்குச் சந்தையின் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்துக்கான பிரிவு,  சீனாவின் அறிவியல் தொழில் நுட்பங்களின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி வழிமுறை மேம்பாடு ஆகியவற்றுக்கு நன்மையளிப்பதாக  உள்ளது.

அறிவியல் தொழில் நுட்பம், இன்னல்களையும் சிக்கல்களையும் சமாளிக்கும் விதமான வலிமைமிக்க கருவியாகும். வரலாற்றில் காணப்பட்ட உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளில்,  அறிவியல் தொழில் நுட்பங்களின் மேம்பாடு, தொழில் நுட்ப புரட்சி, நெருக்கடியில் இருந்து விடுபட்ட முக்கிய ஆதாரமாகும்.

தற்போது, புதிய கரோனா தொற்று நோய் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி,  பெரிய உறுதியற்ற தன்மைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்த சூழலில், அறிவியல் தொழில் நுட்பங்களின் புத்தாக்கம், உலகப் பொருளாதார மீட்சிக்கு உந்து சக்தியை ஊட்டும்.

தகவல்-சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com