ஜெர்மனியில் வெகுவாக குறைந்துவரும் கரோனா பாதிப்பு!

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 252 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 
ஜெர்மனியில் வெகுவாக குறைந்துவரும் கரோனா பாதிப்பு!

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 252 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனி தற்போது 9ஆம் இடத்தில் உள்ளது. எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே இங்கு கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகபட்சமாக ஒருநாளில் 6,174 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அதற்கு மறுநாள்(ஏப்ரல் 4) 5,936 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக குறித்து கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 300க்கும் குறைவாகவே உள்ளது. நேற்று 252 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 184,193 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோன்று ஜெர்மனியில் இறப்பு விகிதமும் மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்தமாக 8,674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் சுமார் 1.69 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. 

மேலும், ஜெர்மனியில் அதிகமாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், லேசான அறிகுறிகள் இருக்கும் நபர்கள்கூட தனிமைப்படுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாகவே அங்கு கரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com