பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடா்புத் துறை அமைச்சா் சையது அமீனுல் ஹக்குக்கு (56) கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே, முன்னாள் பிரதமா்கள் யூசுஃப் கிலானி, ஷாஹித் அப்பாசி, பாகிஸ்தான் முஸ்லீம் (நவாஸ்) கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட பல முக்கியத் தலைவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத்துடன் அந்த நாட்டில் 1,48,921 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.