சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சி மாநாட்டில் சீனாவின் கருத்துக்கள்

பெய்ஜிங் நேரப்படி ஜுன் 17ஆம் நாளிரவு 8 மணிக்கு சீன - ஆப்பிரிக்க சிறப்பு உச்சி மாநாடு சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங்கின் தலைமையில் தொடங்கியது.
சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சி மாநாட்டில் சீனாவின் கருத்துக்கள்

பெய்ஜிங் நேரப்படி ஜுன் 17ஆம் நாளிரவு 8 மணிக்கு சீன - ஆப்பிரிக்க சிறப்பு உச்சி மாநாடு சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங்கின் தலைமையில் தொடங்கியது.

2ஆவது உலகப் போருக்குப் பின் உலகம் மிகக் கடுமையான உலகளாவிய பொதுச் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சூழலில் சீன மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் காணொலி மூலம் ஒன்று கூடி, நோய்த் தடுப்பில் ஒத்துழைப்புடன் கூடிய சமாளிப்புத் திட்டம் மற்றும் சீன-ஆப்பிரிக்க நட்புறவு பற்றி விவாதம் நடத்தினர்.

இந்தச் சிறப்பு உச்சி மாநாட்டில் ஒற்றுமை என்பது இருதரப்பின் ஒருமித்த குரலாக ஒலித்தது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பேசுகையில், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு நோய்த் தடுப்புக்கான வலிமைமிக்க ஆயுதமாகும் என்று கூறினார்.

ஒருமனதுடன் செயல்பட்டால் உலோகத்தையும் உடைக்கும் பெரிய ஆற்றல் கிடைக்கும் என்பது சீனாவின் பழமொழி. ஷிச்சின்பிங் கூறியதைப் போல், சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையேயான ஒற்றுமை, நட்புறவு மற்றும் நம்பிக்கை முன்னிலும் அதிகம் வலுவடைந்து வருகின்றன.

தற்போது, நோய் பரவலைத் தடுப்பது, பொருளாதாரத்தை நிதானப்படுத்துவது, மக்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பது ஆகியவை சீனா, ஆப்பிரிக்கா ஆகிய இருதரப்பும் கூட்டாக எதிர்கொள்ளும் கடினமான கடமைகளாகும். இந்நிலையில், நோய்ப் பரவலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் விதம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானத்துக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், சீன - ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டில் கிடைத்த சாதனைகளின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்தும் அதேவேளை, சுகாதாரம், உற்பத்தி மீட்சி, மக்கள் வாழ்க்கை மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் மேலும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

தவிரவும், நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் பெய்ஜிங் உச்சிமாநாட்டில் அளித்த வாக்குறுதியைச் செயல்படுத்துவது, சர்வதேச நோய்த் தடுப்பு ஒத்துழைப்புக்குப் பங்காற்றுவதாகும் என்றும் அவர் கூறினார். பல பணித்திட்டங்களை விட ஒரு செயலே பயனுள்ளதாக இருக்கும். பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது சிறப்பான காலத்தில் நடைபெற்ற சிறப்பு உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.

மேலும், சீனா ஜி 20 அமைப்புடன் இணைந்து, கடன் தீர்வைத் தளர்த்தும் முன்மொழிவைச் செயல்படுத்தும் என்று தெரிவித்த ஷிச்சின்பிங், இந்த முன்மொழிவின் அடிப்படையில், கடன் தீர்வு காலத்தை ஜி 20 அமைப்பு மேலும் நீட்டிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com