சீனாவுடனான தொடர்பை துண்டிப்பது நடைமுறை சாத்தியமில்லை

சீனாவுடனான தொடர்பை முற்றிலும் துண்டிப்பது, தன் கொள்கை தெரிவுகளில் ஒன்றாகும் என்று அமெரிக்கா அண்மையில் தெரிவித்தது.
சீனாவுடனான தொடர்பை துண்டிப்பது நடைமுறை சாத்தியமில்லை

சீனாவுடனான தொடர்பை முற்றிலும் துண்டிப்பது, தன் கொள்கை தெரிவுகளில் ஒன்றாகும் என்று அமெரிக்கா அண்மையில் தெரிவித்தது.

ஆனால் சீன-அமெரிக்க பொருளாதார இணைப்பை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உயர் நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருளாதார ஒழுங்கு முறைப் பிரச்னை, இரு நாட்டுக்கிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கான சாராம்சமாகும். வெளியுறவு விவகாரம் எனும் அமெரிக்காவின் இதழின் இணையத்தளத்தில், சீனாவுடனான தொடர்பை துண்டிக்க நினைப்பது, மடத்தனமானது என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை அமெரிக்காவின் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹேன்ரி ஃபரேல் மற்றும் ஜோர்ஜ்டான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அப்ராஹாம் நியுமேன் அண்மையில் வெளியிட்டனர்.

சீனாவைச் சார்ந்திருப்பதை வெகுவிரைவில் தவிர்ப்பது, சீனாவுடனான சீரான மற்றும் முக்கியமான பொருளாதார உறவையும், உலகின் இதர நாடுகளுடனான பொருளாதார தொடர்பையும் துண்டிக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டினர்.

சீனாவைப் பொறுத்த வரை, தற்போதைய உலக தொழில் சங்கிலியில் சீனா முக்கிய இடம் பிடித்துள்ளது. கொவைட் 19 நோயின் குறுகிய நேர பாதிப்பு, சீனாவின் மேம்பாட்டை மாற்றவில்லை. சீனாவிலிருந்து விடுபட்டால், மாபெரும் உள்ளார்ந்த வாய்ப்புகளை கொண்டுள்ள சீனச் சந்தையை அமெரிக்க தொழில் நிறுவனங்கள் இழக்கும்.

பன்னாடுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளன. சீனப் பொருளாதாரத்தின் சீரான அதிகரிப்பு, உலகில் ஏறக்குறைய அனைத்து பொருளாதார சமூகங்களுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜப்பானில் உள்ள கோல்ட்மன் சாச்ஸ் குழுமத்தின் பங்கு பத்திர ஆலோசகர் கெதி மாட்சுய் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார விதிமுறை மற்றும் உண்மையைப் பார்த்தால், சீனாவுடன் தொடர்பை துண்டிப்பது, நடைமுறைக்கு வரக்கூடிய தன்மை இல்லை. இது அமெரிக்காவின் சில அரசியல்வாதிகளின் கற்பனையாக இருக்கிறது.

தகவல்: சீன ஊடக குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com