சீன-இந்திய எல்லை விவகாரம் குறித்த காணொலி கூட்டம்

சீன-இந்திய எல்லை விவகாரம் தொடர்பான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு இயங்குமுறையின் காணொலி கூட்டம் ஜூன் 24ஆம் தேதி நடைபெற்றது.
சீன-இந்திய எல்லை விவகாரம் குறித்த காணொலி கூட்டம்

சீன-இந்திய எல்லை விவகாரம் தொடர்பான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு இயங்குமுறையின் காணொலி கூட்டம் ஜூன் 24ஆம் தேதி நடைபெற்றது.

இருநாடுகளின் தூதாண்மை, தேசியப் பாதுகாப்பு, குடியேற்ற விவகாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அண்மையில் சீன-இந்திய எல்லை நிலைமை பற்றி இருதரப்பும் ஆழ்ந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டன. இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் ஜூன் 17ஆம் தேதி எட்டியுள்ள ஒத்த கருத்துக்களையும், ஜூன் 6 மற்றும் 22ஆம் தேதி தளபதி நிலை பேச்சுவார்த்தைகளில் பெறப்பட்ட சாதனைகளையும் செயல்படுத்தி, இராணுவ மற்றும் தூதாண்மை தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, எல்லைப் பிரச்னைகளை இருதரப்பும் கலந்தாய்வு மூலம் அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இருநாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளையும் இருதரப்புக்கிடையில் கையெழுத்தான உடன்படிக்கைகளையும் கண்டிப்பான முறையில் கடைப்பிடித்து, இராணுவத் துறையில் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து வலுப்படுத்தி, எல்லைப் பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கூட்டாகப் பேணிக்காக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com