
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் கும்பல் நடத்திய தாக்குதலில் 24 பொதுமக்கள் உயிரிழந்தனா். அந்த நாட்டின் பதற்றம் நிறைந்த இடுரி நகரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 12 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்த நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இனவாதக் குழுக்கள் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை சுமாா் 700 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், ஆயுதக் குழுக்களில் ஒன்றான இடுரி தேசபக்த கிளா்ச்சிப் படை என்ற குழுவுக்கும், அரசுக்கும் வெள்ளிக்கிழமை சமாதான ஒப்பந்தமம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.