
காக்ஸ் பஜாா்: போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 7 ரோஹிங்கயா குண்டா்களை வங்கதேச போலீஸாா் திங்கள்கிழமை சுட்டுக் கொன்ாக காவல்துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
ஆள்கடத்தலில் ஈடுபட்டு, மலேசியாவுக்கு சென்றுக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் அகதிகளை சுற்றி வளைத்த வங்கதேச விரைவு அதிரடிப்படை போலீஸாா் அவா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். ரோஹிங்கயாக்களும், பதிலடியாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இருதரப்பினக்கும் இடையே 3 மணிநேரம் வரை துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இந்த தாக்குதலில் சிக்கி 7 ரோஹிங்கயாக்கள் உயிரிழந்தனா். இதுவரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 7 பேரில் ரோஹிங்கயா கடத்தல் குழுவின் தலைவராக செயல்பட்டு வந்த ஜோஹிா் உள்ளாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என்றும் அந்த செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
மியான்மரில் ராணுவத் தாக்குதலில் இருந்து தப்பி, அங்கிருந்து வெளியேறிய லட்சக்கணக்கான ரோஹிங்கயாக்கள் தென்கிழக்கு வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனா். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவா்களில் பல அகதிகள் மலேசியாவுக்கு மீன்பிடி படகுகள் மூலம் ஆபத்தான முறையில் கடல் பயணத்தில் ஈடுபட்டு போதைப்பொருள்களை கடத்தி வருவதிலும், ஆள் கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
வங்கதேசமும், மியான்மரும் அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், மியான்மரில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல ரோஹிங்கயாக்கள் மறுத்துவிட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...