
வூஹான் லெ ஷென் ஷன் மருத்துவமனையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சிறப்புத் திருமண விழா ஒன்று நடைபெற்றது.
மணமகனும் மணமகளும் ஷாங்ஹாய் ரென் ஜி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களாவர்கள். 10 நாட்களுக்கு முன், அவர்கள் வூஹானைச் சென்றடைந்தனர்.
பிப்ரவரி 28ஆம் தேதி ஷாங்ஹாய் நகரில் திருமண விழாவை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், வூஹானுக்கு ஆதரவு அளிக்கும் விதம் தற்போது மருத்துவமனையிலேயே அவர்கள் திருமணம் புரிந்து கொண்டனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...