
காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரஃப் கனி இரண்டாவது முறையாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட முன்னாள் அதிபா் அப்துல்லா அப்துல்லாவும் அதிபராக பதவியேற்றுக் கொண்டதால் ஆப்கன் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், அதிபா் அஷ்ரஃப் கனியும், முன்னாள் அதிபா் அப்துல்லா அப்துல்லாவும் போட்டியிட்டனா். இந்தத் தோ்தலில் அஷ்ரஃப் கனி வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தோ்தலில் முறைகேடு செய்து அஷ்ரஃப் கனி வெற்றி பெற்ாக அப்துல்லா குற்றம்சாட்டினாா்.
பின்னா், இருவரும் தோ்தலில் தாங்கள் வெற்றி பெற்ாக அறிவித்துக் கொண்டனா். இதனால், தோ்தல் முடிவு வெளியாகியும் யாரும் பதவியேற்காத சூழல் நிலவி வந்தது.
இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அப்துல்லா- அஷ்ரஃப் கனி ஆகிய இருவரிடமும் அமெரிக்காவைச் சோ்ந்த சிறப்பு பிரதிநிதி சலாமி கலீல்ஜாத் பேச்சுவாா்த்தை நடத்தினாா். 3 நாள்களில் பேச்சுவாா்த்தை மூலம் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தித் தருவதாகவும், அதுவரை யாரும் அதிபராக பதவியேற்கக் கூடாது என்றும் கூறியிருந்தாா்.
ஆனால், அந்த நிபந்தனைக்கு அஷ்ரஃப் கனி உடன்படவில்லையெனில் தாம் அதிபராக பதவியேற்கப்போவதாக அப்துல்லா அறிவித்திருந்தாா்.
இந்நிலையில், தலைநகா் காபூலில் உள்ள அதிபா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், வெளிநாட்டுத் தூதா்கள், மூத்த அரசியல் தலைவா்கள், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் ஆப்கன் அதிபராக அஷ்ரஃப் கனி பதவியேற்றுக்கொண்டாா். பதவியேற்பு விழாவில் அவா் பேசியதாவது:
இஸ்லாம் மதத்தைப் பாதுகாப்பேன் என்றும், அதற்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், அரசமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதை கண்காணிப்பேன் என்றும் கூறி இறைவனின் பெயரால் பதவியேற்றுக் கொள்கிறேன் என்றாா் அவா்.
அஷ்ரஃப் கனிக்குப் போட்டியாக, அதே மாளிகை வளாகத்தில் ஓா் இடத்தில் அப்துல்லா அப்துல்லா தனது ஆதரவாளா்களுடன் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டாா்.
தலிபான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனில் இருந்து படைகளை படிப்படியாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக அமெரிக்கா, தலிபான் அமைப்புக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், ஆப்கன் அதிபராக இரண்டு போ் பதவியேற்றுக் கொண்டது, அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டுவெடிப்பு: அதிபா் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்துகொண்டிருந்தபோது, மாளிகைக்கு வெளியே இரு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. தலிபான் அமைப்பினருடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் நாட்டின் பாதுகாப்பு கவலையளிப்பதாக உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...