உலகில் கொவைட் 19 நோய் தடுப்புப் பணி குறித்து சீனாவின் முன்மொழிவு

கடந்த 12ஆம் தேதி சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் ஐ.நா தலைமைச் செயலாளர்
உலகில் கொவைட் 19 நோய் தடுப்புப் பணி குறித்து சீனாவின் முன்மொழிவு

கடந்த 12ஆம் தேதி சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போது, உலகளவில் கொவைட் 19 நோய் பரவல் தடுப்பு பணி பற்றி ஆலோசனை அளித்தார். 

பன்னாடுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, நோய் தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை பயன்தரும் முறையில் மேற்கொண்டு, நோயை வென்றெடுக்கும் ஆற்றலைத் திரட்ட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். 

நோய் தடுப்புப் பணியின் அனுபவங்களைத் தொகுப்பது, தற்போதைய உலக நோய் பரவல் நிலைமை பற்றி ஆய்வு செய்வதன் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட இம்முன்மொழிவு, உலகப் பொது சுகாதார பாதுகாப்பு மற்றும் மனித குலத்தின் பொது நலன் மீது வல்லரசான சீனாவின் தலைவர் கொண்டுள்ள பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

நோய் தடுப்புப் பணியில் சீன மக்களின் கடினமான முயற்சிகள், பன்னாடுகளின் நோய் தடுப்புக்கு முக்கிய பங்காற்றியுள்ளன. தற்போது உலகளவில் நோய் பரவல் தீவிரமாக இருக்கும் நிலைமையில், சீனா மேலதிக முயற்சிகளுடன் நோயை எதிர்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

கொவைட் 19 நோய் உலகளவில் பரவி வருகிறது. சீனாவின் தடுப்பு முயற்சி மற்றும் முன்மொழிவு, அடுத்த காலக் கட்டத்தில் உலகின் நோய் தடுப்புப் போராட்டத்துக்கு விவேகத்தை வழங்கி, ஆற்றலை உட்புகுத்தியுள்ளது. 

பொருளாதாரம் உலகமயமாகும் காலத்தில், கொவைட் 19 நோய் போன்று திடீரென ஏற்படும் கடுமையான பாதிப்புகள் எதிர்காலத்தில் பல்வேறு பாதுகாப்புப் பிரச்சினைகளினால், புதிய அறைகூவல்களை ஏற்படுத்தும். மனித குலத்தைப் பொறுத்த வரை, எந்த அறைகூவல்களையும் எதிர்நோக்குவதற்கு ஷி ச்சின்பிங் கூறியதைப் போல், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, வலிமைமிக்க ஆயுதமாகும். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com