
கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று காரணமாக அமெரிக்காவில் அவசர நிலையை வெள்ளிக்கிழமை அறிவித்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது, "கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று காரணமாக அமெரிக்காவுக்கு அவசர நிலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்".
அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக அவசரகால செயல்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் அவற்றின் அவசரகால செயல்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் அறிவித்தார்.
கொலம்பியா மற்றும் 48 மாநிலங்களில் மட்டும் இதுவரை 1,740 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர், அவர்களில் 31 பேர் வாஷிங்டனைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வாஷிங்டனில் 457 பேரும், கலிஃபோர்னியாவில் 4 பேரும், ஃபுளோரிடாவில் 2 பேரும், ஜார்ஜியா, கன்சாஸ், நியூ ஜெர்சி மற்றும் தெற்கு டகோட்டாவில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...