அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு கரோனா பரிசோதனை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் சீன் கான்லி சனிக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு கரோனா பரிசோதனை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் சீன் கான்லி சனிக்கிழமை தெரிவித்தார்.

நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அதிபர் டிரம்ப்க்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா வைரஸ் (கொவைட்-19) பரவல் அபாயம் தொடா்பாக அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தேசிய அவசர நிலை அறிவித்துள்ளாா். சனிக்கிழமை நிலவரப்படி அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு 50 போ் பலியாகினா்; மேலும் 2,628 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com