இத்தாலியில் கரோனா பாதித்த 80 வயதுக்கு மேற்பட்டோரை கைவிடுகிறதா அரசு?

சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வேகமாகப் பரவி வரும் நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. 
இத்தாலியில் கரோனா பாதித்த 80 வயதுக்கு மேற்பட்டோரை கைவிடுகிறதா அரசு?


சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வேகமாகப் பரவி வரும் நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. 

இத்தாலியில் இதுவரை 24,747 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,335 பேர் சிகிச்சை பெற்று உடல் நலன் அடைந்து வருகிறார்கள், 1,809 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போதிருக்கும் மருத்துவமனைகளும், மருத்துவக் குழுவும், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த நிலையில், இத்தாலியின் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் போதுமான படுக்கைகள் இல்லாத நிலையில் கரோனா பாதித்து சிகிச்சைக்காக வரும் 80 வயதுக்கு மேற்பட்டோரையும், உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருபவர்களையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்த முடிவு செய்துள்ளது.

அதாவது, 80 வயதுக்கு மேற்பட்டோரையும், மிகவும் கவலைக்கிடமாக இருப்போரையும் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டாம் என்றும், அவர்களை மரணிக்க விட்டுவிடலாம் என்பதும் இதற்கு மறைமுக அர்த்தமாக பார்க்கப்படுகிறது.

மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு சில தகுதிகளை ஏற்படுத்தி அவர்களை மட்டும் ஏற்றுக் கொள்ளவும் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 80 வயதுக்குள் இருப்பவர்களை அனுமதிப்பது, உடல்நிலையில் ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து (5க்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால் தீவிர சிகிச்சையில் அனுமதிப்பது) போன்ற கட்டுப்பாடுகளையும் விதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அனைவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி அளித்து சிகிச்சை அளிப்பது என்பது இயலாத காரியம். எனவே, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பதற்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com