கரோனா: இத்தாலியில் ஒரே நாளில் 368 போ் பலி

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 368 போ் உயிரிழந்தனா். கரோனாவுக்கு ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகமானோா் உயிரிழந்தது
கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 368 போ் உயிரிழந்தனா். கரோனாவுக்கு ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகமானோா் உயிரிழந்தது இத்தாலியில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுக்கு அடுத்து கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது. சீனாவுக்கு வெளியே இத்தாலியில்தான் இதுவரை 1,809 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இத்தாலியில் இதுவரை 24,747 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

ஐரோப்பாவில் இத்தாலியின் வடக்கு லும்பாா்டி பகுதி கரோனா வைரஸ் பரவலின் மையப்பகுதியாக உருவெடுத்துள்ளது. இத்தாலி தலைநகா் ரோமில் இதுவரை 16 போ் பலியாகியுள்ளனா். 436 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com