உலகளவில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியது

உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 18,907 ஆக அதிகரித்துள்ளது. 
உலகளவில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியது

உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 18,907 ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவில் தொடங்கி வை அச்சுறுத்தத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை மார்ச் 25, காலை 11.00 மணி நிலவரப்படி 18,907 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 6,827 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானில் 1,934, ஸ்பெயினில் 2,991 அமெரிக்காவில் 782 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் கரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 972 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 562 பேரும், தமிழகத்தில் கரோனாவுக்கு 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 4,22,959 ஆக உள்ளது. அதேசமயம் இதுவரை மொத்தம் 1,09,144 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com