Enable Javscript for better performance
ஸ்பெயினில் ஒரே நாளில் எட்டாயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு- Dinamani

சுடச்சுட

  

  ஸ்பெயினில் ஒரே நாளில் எட்டாயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

  By DIN  |   Published on : 26th March 2020 05:51 PM  |   அ+அ அ-   |    |  

  tested for corona

  கோப்புப படம்


  ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 8,578 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நல்வாழ்வுத் துறை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் ஸ்பெயின் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 56,188 ஆக உயர்ந்துள்ளது.

  ஸ்பெயினில் வியாழக்கிழமை நிலவரப்படி உயிரிழப்பு 4,089 ஆக உயர்ந்துள்ளது. இது புதன்கிழமை 3,434 ஆக உள்ளது. சீனாவின் மொத்த உயிரிழப்பு 3,291 ஆக உள்ள நிலையில், ஸ்பெயின் அதை விஞ்சியுள்ளது.

  இதன் காரணமாக ஸ்பெயினில் அவசரகால நிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  ஒட்டுமொத்தமாக உலக அளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,88,055 ஆகவும், பலி எண்ணிக்கை 22,049 ஆகவும் உள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai