
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஷேஜியாங் மாநிலத்தில் 29ஆம் நாள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். கரோனா வைரஸ் பரவிய பிறகு அவர் மேற்கொண்ட 4ஆவது ஆய்வுப் பயணம் இதுவாகும்.
26ஆம் நாள் வரை ஷேஜியாங் மாநிலத்தில் உற்பத்தியாற்றல் 90.06 விழுக்காட்டு நிலைக்குத் திரும்பியுள்ளது. நிங் போ நகரிலுள்ள வாகன உதிரி பாக உற்பத்தி பூங்கா, ஷி ச்சின்பிங்கின் இப்பயணத்தின் 2ஆவது இடமாகும். இப்பூங்காவில் சுமார் 70 தொழில் நிறுவனங்கள் உள்ளன.
கரோனை வைரஸ் பரவலைத் தடுக்கும் முக்கிய காலத்தில், பன்முங்களிலும் நீண்டகாலம் என்ற கோணத்தின் அடிப்படையிலும் வளர்ச்சியைச் சீனா பார்க்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G