
அமெரிக்காவின் டுலான் பல்கலைக்கழகத்தின் மருத்துவயியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கார்ரி சமீபத்தில் எ.பி.சி எனும் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலின் போது, புதிய கரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரிலுள்ள மீன் சந்தையில் உருவானது அல்ல என்று குறிப்பிட்டார்.
புதிய கரோனா வைரஸ், வுஹானிலுள்ள மீன் சந்தை ஒன்றில் உருவானது என்று பலர் கருதினர். ஆனால், இது தவறான கருத்து என்று கார்ரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
எமது ஆய்வு மற்றும் பிற ஆய்வுகளின் முடிவு, அங்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் முன்பே அந்த வைரஸ் உருவானதைச் சுட்டிக்காட்டுகிறது. அங்கு வைரஸ் இருந்தது நிச்சயமானது. ஆனால், வைரஸ் உருவான இடம் அது அல்ல.
இதற்கு முன்னதாக, பேராசிரியர் கார்ரியின் குழு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில், புதிய கரோனா வைரஸ், இயற்கையான வைரஸ் அமைப்பாகும் என்று அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G