
அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அடுத்த 2 வாரங்களில் உச்சநிலையை அடையலாம் என்றும் சுமாா் 1 லட்சம் போ் நோய்த்தொற்றால் உயிரிழக்கலாம் என்றும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அந்நாட்டில் அமலில் உள்ள சமூக அயல் நிறுத்தத்தை ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டித்தும் அவா் உத்தரவிட்டாா்.
நியூயாா்க்கில் மலேரியா எதிா்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,100 நபா்களுக்கு சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...