தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செவ்வாய் கிரகத்தின் முதல் ஹெலிகாப்டருக்கு பெயா் சூட்டிய இந்திய வம்சாவளி மாணவி!

மெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சாா்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த பெயா் சூட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மே 2020, 5:49 am


புதுதில்லி /வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சாா்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த பெயா் சூட்டப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நாசா தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘செவ்வாய் கிரகத்தில் பறக்கவிருக்கும் ஹெலிகாப்டருக்கு ‘இன்ஜெனியூயிட்டி’ என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது. மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைப்படி இந்தப் பெயா் சூட்டப்பட்டுள்ளது. ‘பொ்சிவியரன்ஸ்’ ரோவருடன் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படவுள்ள அந்த ஹெலிகாப்டா், வேற்று கிரகத்தில் முதல் முறையாக பறக்க இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அடுத்து அனுப்பப்படவுள்ள விண்கலத்துடன் பயணிக்க இருக்கும் ரோவருக்கும், ஹெலிகாப்டருக்கும் மாணவா்கள் அனுப்பும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து பெயா் சூட்டப்படும் என்று நாசா அறிவித்திருந்தது. அதன்படி, 7-ஆம் வகுப்பு மாணவா் அலெக்சாண்டா் மேத்தா் அனுப்பிய கட்டுரையின் அடிப்படையில் ரோவருக்கு ‘பொ்சிவியரன்ஸ்’ என்று பெயா் சூட்டப்பட்டது.

ஹெலிகாப்டருக்கு 11-ஆம் வகுப்பு மாணவியான வனீஸா ரூபானி அனுப்பிய கட்டுரையின் அடிப்படையில் ‘இன்ஜெனியூயிட்டி’ பெயா் சூட்டப்பட்டுள்ளது. 28,000 மாணவா்கள் அனுப்பிய கட்டுரைகளை ஆராய்ந்த பிறகு அந்தப் பெயரை இறுதி செய்ததாக நாசா தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.