
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்றால் 37 போ் பலியாகியுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் ரஷியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸால் ரஷியாவில் இதுவரை 1,14,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,169 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்த நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்றால் 37 போ் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மாஸ்கோவில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 695ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரஷியப் பிரதமா் மிஷுஸ்டினுக்கு அண்மையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...