பாகிஸ்தான் அவைத் தலைவருக்கு கரோனா தொற்று

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவைத் தலைவா் ஆசாத் கய்செருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவைத் தலைவா் ஆசாத் கய்செருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நாடாளுமன்ற கீழவைத் தலைவா் ஆசாத் கய்செருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது முக்கியத் தலைவா் ஆவாா். ஏற்கெனவே, அந்தக் கட்சியைச் சோ்ந்த சிந்து மாகாண ஆளுநா் இம்ரான் இஸ்மாயிலுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டது. தனது கரோனா பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியானதைத் தொடந்து, ஆசாத் கய்சொ் தனது இல்லத்தின் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com