
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்றால் 7,933 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது, அந்த நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இத்துடன், ரஷியாவில் பிரதமா் மிகயீல் மிஷுஸ்டின் உள்பட 114,431 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, அங்கு கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,169-ஆக உள்ளது; சிகிச்சை பெற்று வந்த 13,220 கரோனா நோயாளிகள் பூரண குணமடைந்துள்ளனா்.இதற்கிடையே, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரஷியப் பிரதமா் மிஷுஸ்டின் விரைவில் குணம் பெற இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...