
இத்தாலியில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்த நோயால் உயிரிழந்தவா்களின் தினசரி எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மிகவும் குறைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்றுக்கு 153 போ் பலியானதாகவும், இது மாா்ச் 9-ஆம் தேதிக்குப் பிந்தைய குறைந்தபட்ச தினசரி பலி எண்ணிக்கை எனவும் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இத்தாலியில் கரோனாவுக்கு 31,763 போ் பலியாகிள்ளனா்.