
அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரையன் சிபிஎஸுக்கு 24ஆம் நாள் அளித்த பேட்டியில், தடுப்பூசி தொடர்புடைய அமெரிக்காவின் ஆய்வு முடிவை சீனா நகலெடுக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
சீன வெளியுறவு அமைச்சகம் 25ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ்லிஜியான் அமெரிக்காவின் இக்குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்தார்.
அமெரிக்காவின் இக்கருத்துக்கு ஆதாரம் இல்லை. கரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான ஆய்வில் சீனா அதிகமான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளதுதான் உண்மை என்று தெரிவித்தார்.
உலகில் 100க்கும் மேலான ஆய்வுக் குழுக்கள் பல தொழில் நுட்பங்கள் மூலம் தடுப்பூசி ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சமூக வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவர் வூயுவான்பின் கூறுகையில், தற்போது, உலகளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 ஆகும். அவற்றில், 5 சீனா கண்டுபிடித்த தடுப்பூசிகளாகும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...