பலி எண்ணிக்கை: முதல் இடத்தில் அமெரிக்கா, 13வது இடத்தில் இந்தியா

உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை எட்டியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரமாக உள்ளது.
பலி எண்ணிக்கை: முதல் இடத்தில் அமெரிக்கா, 13வது இடத்தில் இந்தியா


புது தில்லி: உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை எட்டியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரமாக உள்ளது.

கரோனா பாதித்து உயிரிழப்போரை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு கரோனா பாதித்து இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரம்  பேர் பலியாகியுள்ளனர்.

அடுத்த இடத்தில் பிரிட்டன் (38,161), இத்தாலி (33,229), பிரான்ஸ் (28,714), பிரேசில் (27,944), ஸ்பெயின் (27,121)  ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

இந்தியா சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரமாக உள்ளது. அதே சமயம், பலி எண்ணிக்கை 4,980 ஆக உள்ளது. இதனால் உலகளவில் பலி எண்ணிக்கையில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com