பாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; புதிதாக 1,123 பேருக்குத் தொற்று

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,123 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை 977 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்(ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,123 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு 3,35,093 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் கரோனா தொற்றுக்கு 12 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 6,835 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3,15,016 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 27,953 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 44,86,843 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் முதலிடத்தில் சிந்து மாகாணம் உள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பாதிப்பு குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

மாகாணவாரியாக பாதிப்பு எண்ணிக்கை:

சிந்து - 146,331, பஞ்சாப் - 104,554, கைபர்-பக்துன்க்வா- 39,649, இஸ்லாமாபாத் - 20,089, பலுசிஸ்தான்- 15,954, கில்கித்-பல்திஸ்தான்- 4,279 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 4,237 பேர். 

மாகாணவாரியாக உயிரிழப்பு எண்ணிக்கை:

சிந்து - 2,631, பஞ்சாப் - 2,365, கைபர்-பக்துன்க்வா- 1,279, இஸ்லாமாபாத் - 222, பலுசிஸ்தான்- 151, கில்கித்-பல்திஸ்தான்- 92 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 95 பேர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com