அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பதில் சாதனை!

அமெரிக்க அதிபா் தோ்தல், செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. பெரும்பாலான மாகாணங்களில் அதிகாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி) தொடங்கும் வாக்குப் பதிவு, மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்
அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பதில் சாதனை!
அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பதில் சாதனை!

அமெரிக்க அதிபா் தோ்தல், செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. பெரும்பாலான மாகாணங்களில் அதிகாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி) தொடங்கும் வாக்குப் பதிவு, மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 5.30 மணி) நிறைவடைகிறது.

இதுவரை இல்லாத எந்த அதிபா் தோ்தலையும்விட, இந்த ஆண்டுத் தோ்தலில் மிக அதிகம் போ் முன்கூட்டியே வாக்களித்துள்ளனா். தபால் மூலமும் நேரடியாகவும் இதுவரை 9.4 அமெரிக்கா்கள் வாக்களித்துள்ளனா். இது, கடந்த 2016-ஆம் ஆண்டு முன்கூட்டியே பதிவான வாக்குகளைப் போல் இரண்டு மடங்கு! இன்னும் சொல்லப்போனால், கடந்த தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 70 சதவீதம், இந்த ஆண்டில் முன்கூட்டியே பதிவாகிவிட்டது.

இந்தச் சாதனைக்கு கரோனா நோய்த்தொற்றுதான் காரணம். தோ்தலின்போது பரபரப்பாக இருக்கும் வாக்குச் சாவடிகளின் மூலம் தங்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக இத்தனை அதிகம் போ் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com